Tamilசெய்திகள்

பனை ஓலையில் தாஜ்மஹால் செய்த பனைமரம் ஏறும் தொழிலாளி!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 65). பனைஏறும் தொழிலாளி. இவர் கருங்குளம் பகுதியில் பனை ஏறுவதும், மற்ற நேரங்களில் விவசாயமும் செய்தும் வந்தார். இவருக்கு பனை ஓலையில் பலவிதமாக பொருள்கள் செய்வதில் ஆர்வம். பனை நாரில் கட்டில் முடைவது, பனை ஓலையில் பாய் முடைவது, நார் பெட்டி செய்வது உள்பட தொழிலை செய்து கொண்டிருந்தார்.

இவர் கண்காட்சியில் வைக்கும் அளவுக்கு ஓலையில் பலவிதமான பொருள்களை செய்ய ஆசைப்பட்டார். இதன் பயனாக தாஜ்மஹால் செய்வதற்கு இவர் பல ஸ்தூபிகளை அமைத்து அதன் மேலே ஓலையை கொண்டு பல வேலைபாடுகளை செய்துள்ளார். பளிங்கு மாளிகை என்பதை குறிக்கும் வண்ணத்தில் இதற்கு வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தாஜ்மஹால் சுமார் 3 அடி உயரத்தில் மிக பிரமாண்டமாக காணப்படுகிறது.

ஓலைகளால் செய்யப்பட்ட பெட்டிகள், கூடை மற்றும் குதிரை பொம்மைகள்.

மேலும் ஏரோபிளேன், சர்ச், ஆலய கோபுரம், வில்லு வண்டி, யானை, நார் பெட்டி, கல்லாபெட்டி, மிளகு பெட்டி, கிலுக்கு உள்பட பல பொருள்களை செய்தார். பின் அதற்கு வர்ணம் தீட்டினார். இந்த பொருள்கள் பார்ப்பவர்களை பரவசப்படுத்தியது.

இதுகுறித்து பால்பாண்டி கூறும்போது, தற்போது பனை தொழில் நசிவடைந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் பனையில் இருந்து கிடைக்கும் பொருள்கள் பயன்பாடு அதிகமாக இருந்தாலும் போலி பெருத்துக் கொண்டிருக்கிறது. பனை ஏறும் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால் பனையின் பயன்பாடு எல்லோருக்கும் தெரிய வேண்டும் இதற்காக வித்தியாசமாக முயற்சி செய்ய நினைத்தேன்.

பனை ஓலை மற்றும் நார் மூலமாக பொருள்களையெல்லாம் உருவாக்கி எனது வீட்டில் காட்சிக்கு வைத்துள்ளேன். விரைவில் கல்வி நிலையங்கள் உள்பட பல இடங்களுக்கு இந்த பொருள்களை கொண்டு போய் கண்காட்சியாக வைக்கலாம் என நினைக்கிறேன். அதோடு அரசு நலிந்து இருக்கும் இந்த தொழிலை மேலும் வலுப்படுத்த அரசு உதவிகள் செய்ய வேண்டும். இதை இந்த கண்காட்சி மூலமாக அரசுக்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *