சென்னையில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்-லைன் வழி வகுப்புகள் எடுக்கும் போது பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான பாலியல் புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலனை வரும் ஜூன் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி அப்துல் பாருக் உத்தரவிட்டார். மேலும் ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சென்னையில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வணிகவியல் பாட ஆசிரியர் ஆனந்தன் மீது பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூகவலைதளத்தில் வெளியாயின. இதையடுத்து பள்ளி ஆசிரியர் ஆனந்தனை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரத்தை தொடர்ந்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளி சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.