பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை – மணிப்பூர் அரசு அறிவிப்பு

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறி கடந்த ஒரு மாதமாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.

வன்முறையை காரணமாக வைத்து பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணிக்கு வருவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அரசு அலுவலகங்களில் பணிகள் முடங்கியுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், முதல் மந்திரி பிரேன் சிங் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசு அலுவலர்கள் பணிக்கு வராத பட்சத்தில் சம்பளம் வழங்கப்படாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தவிர்த்து, வேலைக்கு வராதவர்களுக்கு ‘நோ ஒர்க் நோ பே’ விதி பின்பற்றப்பட்டு சம்பளம் வழங்கப்படாது என கூறப்பட்டுள்ளது.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools
Tags: tamil news