பட வாய்ப்புகள் இல்லாததால் இசை ஆல்பங்களில் நடிக்கும் ஹன்சிகா

தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா.

தற்போது அவர் கைவசம் `மஹா’ என்கிற படம் மட்டும் உள்ளது. இது அவரது 50-வது படம். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து அவருக்கு பெரிதாக பட வாய்ப்பு இல்லை.

இதனால் அவர் ஆல்பம் பாடல்களில் நடித்து அதனை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றி வருகிறார். இவர் நடித்த ‘பூட்டி ஷேக்’, ‘மாஸா’ போன்ற ஆல்பம் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பட வாய்ப்பு இல்லாததால் தொடர்ந்து இசை ஆல்பங்களில் நடிக்க ஹன்சிகா திட்டமிட்டு உள்ளாராம்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools