பட உலகில் பரபரப்பாக பேசப்படும் ஏ.எல்.சூர்யாவின் நாவல் ‘அனிதா பத்மா பிருந்தா’
பட உலகில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் புத்தகம் ‘அனிதா பத்மா பிருந்தா’. 560 பக்கங்கள் கொண்ட நாவல் இது. இதை எழுதியவர் ஏ.எ.சூர்யா என்ற இளைஞர். பட உலகுடன் தொடர்பு கொண்டிருக்கும் இவர் தான் சந்தித்து பழகிய பலரிடமும் தனக்கு உண்டான மறக்க முடியாத அனுபவங்களையும், இனிய நினைவுகளையும், கசப்பான உண்மைகளையும், மனதில் ஆழமாக பதிந்த சம்பவங்களையும், ஆற முடியாத காயங்களையும் நாவலாக எழுதியிருக்கிறார்.
இந்த புதினத்தை அவரே தன் ’பீ பாஸிட்டிவ் புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனத்தின் மூலம் வெளியிட்டிருக்கிறார். இதில் ஒரு பிரபல நடிகை, கதாபாத்திரமாக வருகிறார். சாதனைகள் படைத்த ஒரு புகழ் பெற்ற திரைப்பட இயக்குநரும் வருகிறார். இவர்கள், தவிர, வேறு பல பட உலக கதாபாத்திரங்களும் கூட இதில் வருகிறார்கள். நாவலை வாசிக்கும் போதே, அவர்கள் யார் என்று நாம் கண்டு பிடித்துவிடலாம்.
பல்வேறு தலைப்புகளில் ஏ.எல்.சூர்யா பேசிய 175 உரைகள் யூட்யூப்பில் இடம் பெற்றிருக்கின்றன.
இதற்கு முன்பு ஏ.எல்.சூர்யா எழுதியிருக்கும் நூல்கள்:
1. ஆழ்மனமும் அதன் அபரிமித ரகசியங்களும்
2. பணமே…பணமே…ஓடி வா
3. பேராற்றல் படைத்தவர்களே…எழுந்திருங்கள்
4. கோடிக்கணக்கான ரூபாயை ஆழ்மனதை இயக்கி அடைவது எப்படி?
ஏ.எல்.சூர்யா ‘அனிதா பத்மா பிருந்தா’ நாவலை எழுதியதுடன் நிற்காமல், அதை பட உலகில் உள்ள நிறைய பிரபலங்களுக்கு அனுப்பி வைத்தும் இருக்கிறார். பட உலகில் இந்த புதினம் என்ன தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதை காத்திருந்து பார்ப்போம்.