பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் , வேட்பாளருமான ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி போட்டியிடுகிறார்.
இதையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று அமேதி தொகுதியை அடைந்த ஸ்மிரிதி இரானி, உத்தரபிரதேச மாநிலம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கடந்த 2014ம் ஆண்டு ஸ்மிர்தி இரானி வேட்புமனு தாக்கல் செய்தபோது, 1994ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். இதனை எதிர்கட்சியினர் தொடர்ந்து மறுத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தபோது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பை முடிக்கவில்லை எனவும், அவரது சொத்து மதிப்பு ரூ.4.71 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது.
இதில் ரூ.1.75 கோடி அசையும் சொத்துக்கள் ஆகும். இரானிக்கு ரூ.13.14 லட்சம் மதிப்புள்ள வாகனங்களும், ரூ.21 லட்சம் மதிப்புள்ள நகைகளும் உள்ளன. ரூ.1.45 கோடி மதிப்புள்ள விவசாய நிலம் மற்றும் ரூ.1.50 கோடி மதிப்புள்ள தங்கியிருக்கும் வீடுஆகியவற்றுடன் சேர்த்து ரூ.2.96 கோடி அசையா சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்மிரிதி இரானியின் கணவர் ஜுபின் இரானியின் சொத்து மதிப்பில் ரூ.1.69கோடி அசையும் சொத்துக்கள் எனவும், ரூ.2.97கோடி அசையா சொத்துக்கள் எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.