X

பட்ஜெட் தாக்கல் – தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழக சட்டசபையில் 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் துறைவாரியான நிதி ஒதுக்கீடு மற்றும் முக்கிய திட்டங்கள் வருமாறு:-

தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழக மின்சாரத்துறைக்கு ரூ.20,115.58 கோடி நிதி ஒதுக்கீடு
சிறைச்சாலைகளுக்கு ரூ.392 கோடி ஒதுக்கீடு
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.4,315 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் மேலும் 6 பெட்ரோல் நிலையங்கள் அமைக்கப்படும்
உணவு மானியத்திற்காக ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழக உயர்கல்வித்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.5.052.84 கோடி நிதி ஒதுக்கீடு
2020-2021ம் ஆண்டு நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும்
நெல், சிறுதானியம், பயறு வகைகள், பருத்தியில் அதிக விளைச்சல் தரும் ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும்
வேளாண் மண்டலம் விவசாயத்துறைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது
பொது விநியோகத்திட்டத்தை செயல்படுத்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு ரூ.400 கோடி மானியம்
பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.34,181 கோடி நிதி ஒதுக்கீடு
மீன்வளத்துறைக்கு ரூ.1229 கோடி ஒதுக்கீடு
மருத்துவத்துறைக்கு ரூ.15,863 கோடி நிதி ஒதுக்கீடு
பட்டா மாறுதல் பணியை விரைவுபடுத்தும் வகையில் நில அளவைப் பணிகளை மேற்கொள்ள வி.ஏ.ஓ.-க்களுக்கு அதிகாரம்
நெடுஞ்சாலைத்துறையில் புதிதாக சாலைப் பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்படும்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிட்லப்பாக்கம் ஏரியை மீட்டெடுக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு.

Tags: south news