பட்ஜெட் கூட்டத்தில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் வருமானம், மணிப்பூர் பிரச்சனைகளை எழுப்ப காங்கிரஸ் முடிவு

பாராளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் தொடரில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், மணிப்பூரில் தொடரும் வன்முறை தொடர்பான பிரச்சனைகளை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், பாராளுமன்ற இருஅவைகளின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே, மற்ற கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பட்ஜெட் தொடரில் காங்கிரஸ் கட்சிக்கான வியூகம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பட்ஜெட்டுக்கு முன்னதாக ஜனாதிபதி உரையாற்றுவார். இந்த உரை எதிர்காலத்தில் அரசு மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகளை பற்றியது. ஆனால் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு, மணிப்பூர் விவகாரம் ஆகியவை ஜனாதிபதி உரையில் இடம் பெறவில்லை என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மக்களவை கொறடா கே. சுரேஷ் கூறுகையில் “ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிப்பு மற்றும் பட்ஜெட் விவாத்தின்போது எழுப்பக்கூடிய பல்வேறு விவகாரங்கள் குறித்து முழுமையாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஜனாதிபதி உரையின்போது மக்கள் தொடர்பான பல விசயங்கள் குறிப்பிடப்படவில்லை. அரசு அவர்களுடைய வேலைகளை மட்டுமே செய்ய விரும்புகிறது. மக்களின் நலனில் அக்கறை காட்டவில்லை. ஆனால், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மக்கள் பிரச்சனைகளுக்காக நாங்கள் குரல் கொடுக்க விரும்புகிறோம். என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news