படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டமாக சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பாரி முனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 55 ஆண்டுகால பொது வாழ்க்கை அனைத்துமே புகைப்பட கண்காட்சியாக தொகுப்பட்டிருக்கிறது.

இந்த கண்காட்சியை அரசியல் தலைவர்கள் திரைப்பிரபலங்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என பத்து நாட்களுக்கு மேலாக ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இவருடன் அமைச்சர் சேகர் பாபு , நடிகர் யோகிபாபு ஆகியோர் உடனிருந்தார்கள்.

குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படமும் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, ” முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் ஒன்று தான். 55 ஆண்டுகாலமாக அவர் பொது வாழ்க்கையில் ஈடுப்பட்டிருக்கிறார். படிப்படியாக தனது வாழ்க்கையில் உயர்ந்து வந்தவர். ” என்று கூறினார். பின்னர் இந்த கண்காட்சி குறித்து நடிகர் ரஜினிகாந்த் புத்தகம் ஒன்றில் தனது கருத்துகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools