Tamilசினிமா

படப்பிடிப்பு முடிவடைந்ததை பட்டாசு வெடித்து கொண்டாடிய நடிகர் துல்கர் சல்மான்

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழ் நாட்டில் காரைக்குடியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் 2023 -ஆம் ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்தது.

‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் 95 நாட்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை நடிகர் துல்கர் சல்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். மேலும், ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தின் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.