X

படப்பிடிப்பு தளங்கள் தான் நிம்மதி தரும் இடங்களாக இருக்கின்றன – நடிகை கங்கனா ரணாவத்

கங்கனா ரனாவத்தை பல்வேறு சர்ச்சைகள் பின் தொடர்கின்றன. அவருக்கும் மராட்டிய மாநில அரசுக்குமான மோதல் பெரிதாகிக்கொண்டே போகிறது. தற்போது அவர் கையில் இருக்கும் படம் தலைவி. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தலைவி’ படப்பிடிப்புத் தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள கங்கனா கூறியிருப்பதாவது: வணக்கம் நண்பர்களே, அன்பான மற்றும் மிகவும் திறமையான இயக்குநரான ஏ.எல்.விஜய்யுடன் திரைப்படம் குறித்து உரையாடியபோது எடுத்த சில படங்கள் இவை. உலகில் எத்தனையோ அற்புதமான இடங்கள் இருக்கலாம்.

ஆனால், படப்பிடிப்புத் தளங்களே எனக்கு மிகவும் நிம்மதியான, இனிமையான இடங்களாக இருக்கின்றன.” இவ்வாறு கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவாக கங்கனா நடிப்பதற்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோதே எதிர்ப்புகளும் கிண்டல்களும் எழுந்தன. தற்போதைய படங்களுக்கும் அதே கிண்டல்கள் வருகின்றன.