X

படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு காயமடைந்த ஹன்சிகா!

ஹன்சிகா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மஹா’. நாயகியை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை யூஆர் ஜமீல் இயக்கி வருகிறார். எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் இடம் பெறும் ஒரு சண்டைக் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதில் நடிகை ஹன்சிகா தரையில் குட்டிக் கரணம் அடிக்க வேண்டும். ஒரு சிறு கால இடைவெளியில் அது தவறாக அமைந்து, காயத்தில் முடிந்தது. விரைவான முதல் உதவி மற்றும் குழுவின் ஆதரவு ஹன்சிகாவை அந்த சம்பவத்தில் இருந்து மிக விரைவில் மீட்டது. திரும்ப திரும்ப சொல்லப்பட்ட ஆலோசனைக்கு பின்னரும் கூட, ஹன்சிகா எந்தவொரு கையசைவும் இன்றி அந்த காட்சியில் நடித்தார்.

இப்படம் ஹன்சிகாவின் 50வது படம், இசையமைப்பாளர் ஜிப்ரானின் 25வது படமாகும்.