படத்திற்காக சிகரெட் பிடிக்க கத்துக்கொண்ட மகிமா நம்பியார்
விக்ரம் பிரபு ஜோடியாக அசுரகுரு படத்தில் நடித்துள்ள மகிமா நம்பியார் கூறியதாவது: ‘இதில் நான் துப்பறியும் பெண் கேரக்டரில் நடித்துள்ளேன். விக்ரம் பிரபு ஜோடியாக நடித்தது சவுகரியமாக இருந்தது. படத்துக்காக பைக் ஓட்ட கற்றுக்கொண்டேன்.
ஓரிரு காட்சியில் ‘தம்’ அடிப்பது போன்று இடம்பெறுகிறது. சிகரெட் பிடிக்கும்போது சிரமமாக இருந்தது. புகையை என் தொண்டைக்கு கீழே இறங்க அனுமதிக்கவில்லை. இதனால் இருமல் வராமல் தடுக்க முடிந்தது.
அடுத்து, சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா நடிக்கும் மகாமுனி படத்தில் பத்திரிகை நிருபராக வருகிறேன். கேரளாவில் தபால் மூலம் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படிக்கிறேன். படித்துக்கொண்டே சினிமாவில் நடிப்பது சிரமமாக இல்லை’ என்றார்.