நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தற்போது இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் திரில்லர் படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, எஸ் யுவா ஒளிப்பதிவு செய்கிறார். ‘ரன் பேபி ரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி கூறியதாவது, “இப்போதெல்லாம், படத்தின் வசூல் பற்றி இளைஞர்கள் அதிகமாகக் கவலைப்படுகிறார்கள். அமெரிக்காவில் எவ்வளவு வசூல், ஐரோப்பாவில் இவ்வளவு வசூல் என்று அவர்களின் நேரமும் ஆற்றலும் வீணாகிறது. கோடிகள் செலவழித்து படம் தயாரிப்பவர்கள் இதுபற்றி கவலைப்பட்டுக் கொள்வார்கள். இளம்தலைமுறையினர் கவலைப்படுவதில் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு இல்லை” என்று கூறினார்.