Tamilசினிமா

பஞ்சாயத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாக்யராஜ் எழுத்தாளர்களுக்கு கொடுப்பதில்லையா? – எழுத்தாளர் ஏ.எல். சூர்யா ஆதங்கம்

தமிழ் சினிமாவில் பல சங்கங்கள் இருக்கின்றன. அந்த சங்கங்களில் அவ்வபோது பல பஞ்சாயத்துகளும் நடக்கின்றன. அந்த வகையில், எழுத்தாளர்கள் சங்கம் ஒன்றும் இருக்கிற்து. கதை திருட்டு விவகாரம் மூலம் வெளியே தெரிந்த எழுத்தாளர்கள் சங்கத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யாரஜ் தான் தலைவராக இருக்கிறார். இவர் தலைவராக பொருப்பேற்ற பிறகு தான் கதை திருட்டு விவகாரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உரிய நிவாரணம் பெற்றுக் கொடுத்தார். அதிலும் விஜய் போன்ற முன்னணி ஹீரோவின் படத்திற்கு எதிராக பஞ்சாயத்து செய்து அதில் வெற்றியும் பெற்றதால், எழுத்தாளர்கள் சங்கம் மட்டும் இன்றி பல எழுத்தாளர்கள் பாக்யராஜை தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அதை தொடர்ந்து மேலும் சில கதை திருட்டு விவகாரத்தில் பஞ்சாய்த்து செய்த பாக்யராஜ், தயாரிப்பாளர்களிடம் இருந்து பல லட்சங்களை நிவாரண தொகையாக பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

இப்படி பஞ்சாயத்துகளில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டி வரும் பாக்யராஜ், எழுத்தாளர்கள் சங்கத்தின் பிற பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக அறிமுக எழுத்தாளர்களை அவர் கண்டுக்கொள்ளாமல் அலக்கழிப்பதாக கூறப்படுகிறது.

அதாவது, தமிழ் சினிமாவில் அதிர்வலையை ஏற்படுத்திய ’அனிதா பத்மா பிருந்தா’ என்ற நாவலை எழுதிய ஏ.எல்.சூர்யா, அந்த நாவலை திரைப்படமாக தயாரித்து இயக்குவதோடு, அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார். தற்போது படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டிருப்பவர். கேரள மாநிலம் வயநாட்டில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்திருக்கிறார். ஆனால், கன மழையால் வயநாடு மிகப்பெரிய பாதிப்பை சந்தித்திருப்பதால், அங்கு நிலமை சீரான பிறகு, இரண்டு மாதங்களில் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்.

இந்த நிலையில், ஏ.எல்.சூர்யா, தனது படத்தின் கதையை முழுவதுமாக முடித்துவிட்டு எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்ய நினைத்திருக்கிறார். சங்கத்தில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே கதையை பதிவு செய்ய முடியும் என்பதால், சங்கத்தில் உறுப்பினராக விண்ணப்பித்துள்ளார். அதன்படி, சங்க அலுவலக ஊழியர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் வழங்கியிருக்கிறார். அவர்களும் அதை சரி பார்த்து, உறுப்பினராவதற்கான சந்தா தொகை ரூ.7 ஆயிரத்தை கட்ட சொல்லியிருக்கிறார்கள். அவரும் அதற்கான டிடி -யை எடுத்து கொடுத்திருக்கிறார். ஒரு மாதத்தில் உறுப்பினர் அட்டை வழங்கப்படும் என்று சங்க ஊழியர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், ஏ.எல்.சூர்யா பணம் கட்டி 6 மாதங்கள் ஆன பிறகும் அவருக்கு இதுவரை உறுப்பினர் அட்டை வழங்கப்படவில்லையாம்.

அவர் பல முறை சங்கத்தை தொடர்பு கொண்டு கேட்டால், இப்போது, அப்போது என்று சொல்லி மழுப்பியிருக்கிறார்கள். ஆனால், இதுவரை அடையாள அட்டையை கொடுக்கவில்லையாம். தற்போது அவர் அடையாள அட்டை கேட்டு தொடர்பு கொண்டால், அவரிடம் கோபமாக பேசி போனை துண்டித்து விடுகிறார்களாம்.

தலைவரான கே.பாக்யராஜ் அடையாள அட்டையில் கையெழுத்து போட வேண்டும் என்பதால், அவரது கையெழுத்துக்காக காத்திருப்பதாக சொல்கிறார்களாம். பஞ்சாயத்து என்றால் பறந்து வரும் பாக்யராஜ், ஒரு எழுத்தாளருக்காக கையெழுத்து போட 6 மாதங்கள் ஆன பிறகும் போடாமல் அலக்கழிப்பது ஏன், என்று தான் தெரியவில்லை, என்று சம்மந்தப்பட்ட எழுத்தாளர் புலம்புகிறார்.

அப்படியானால், எழுத்தாளர் சங்க தலைவரான கே.பாக்யராஜ், கதை திருட்டு உள்ளிட்ட பணம் சம்மந்தமான பஞ்சாயத்துக்களில் மட்டுமே தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, சங்கத்தின் மற்ற பணிகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கவனம் செலுத்துவதில்லை என்பது நன்றாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *