Tamilவிளையாட்டு

பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக வாசிம் ஜாபர் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர். ரஞ்சி கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமைக்குரிய இவர், கடந்த 2019 முதல் 2021 வரை பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார். கடந்த 2022 தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற்றது. அப்போது பயிற்சியாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மார்க் வுட் என்பவரை பயிற்சியாளராக நியமித்தது.

இந்த நிலையில், தற்போது 2023 சீசனில் வாசிம் ஜாபர் மீண்டும் பேட்டிங் பயிற்சியாளராக செயல்படுவார் என பஞ்சாப் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹடின் துணை பயிற்சியாளராக செயல்படுவார் எனவும் அறிவித்தள்ளது.

பஞ்சாப் அணி மயங்க் அகர்வால் உள்பட முக்கிய வீரர்களை ரிலீஸ் செய்தது. அந்த அணியிடம் தற்போது 32.20 கோடி ரூபாய் உள்ளது, மினி ஏலத்தின்போது தேவைப்பட்டால் மயங்க் அகர்வால் உள்பட ரிலீஸ் செய்ய வீரர்களை எடுத்துக் கொள்ள முடியும். 15 சீசனில் இதுவரை ஒரு முறை கூட பஞ்சாப் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது கிடையாது. கடந்த முறை 6-வது இடத்தை பிடித்தது.