Tamilசெய்திகள்

பஞ்சாப் எல்லையில் நடத்திய தீவிர சோதனையில் சீன ட்ரோன்கள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் எல்லை பாதுகாப்பு படை தேடுதல் வேட்டை நடத்தினர்.

அமிர்தசரஸ் மாவட்டம் ரத்தன்குர்த் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ட்ரோன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இதே போன்று தர்ன் தரன் மாவட்டத்தில் தால் கிராமத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் பஞ்சாப் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ட்ரோன் ஒன்றை பறிமுதல் செய்தனர்.

தேடுதல் வேட்டையில் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு ட்ரோன்களும் சீனாவில் தயாரிக்கப்பட்ட DJI Mavic 3 Classic மாடல்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.