X

பக்தி தான் என்றைக்கும் நம் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும்! – இல.கணேசன்

லஷ்மன் ஸ்ருதி சார்பில் சாமியே சரணம் அய்யப்பா என்ற தலைப்பில் 29-ம் ஆண்டு பக்தி இசை பூஜை என்ற பக்தி பாடல் இசை நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு இயக்குனர் கங்கை அமரன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. பொருளாளர் துரை முருகன், முன்னாள் எம்.பி. ஜெகத்ரட்சகன், பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இல.கணேசன் பேசியதாவது:-

இந்த விழாவுக்கு தி.மு.க.வை சேர்ந்த துரைமுருகன், ஜெகத்ரட்சகன் ஆகியோர் வந்திருக்கிறார்கள். அ.தி.மு.க.வை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் வந்திருக்கிறார்கள். தி.மு.க. பொருளாளர் துரை முருகனையும், தன்னையும் பக்திதான் ஒரே மேடையில் இணைத்துள்ளது.

இதன் முலம் பக்திதான் என்றைக்கும் நம் மத்தியில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பது நன்றாக தெரிகிறது. அது மாத்திரமல்ல அரசியல் ரீதியாக எந்த கருத்து வேறுபாடு இருந்தாலும் இந்த பக்திதான் நம்மை ஒற்றுமைப்படுத்தும் என்பதும் நிரூபணம் ஆகி இருக்கிறது.

அசைக்க முடியாத இறை நம்பிக்கை இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அய்யப்பன் இசை பூஜைக்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை லஷ்மன் ஸ்ருதி நிர்வாகிகள் ராமன், லஷ்மன் செய்திருந்தனர்.