Tamilசெய்திகள்

நைஜீரியாவில் கச்சா எண்ணெய் திருட்டின் போது தீ விபத்து – 12 பேர் பலி

நைஜீரியா நாட்டில் கச்சா எண்ணெய் திருட்டு சம்பவங்கள் பெருமளவில் நடைபெற்று வருகிறது. கச்சா எண்ணெய் விநியோகிக்கும் குழாய்களில் இருந்து சட்ட விரோதமாக கச்சா எண்ணெய் திருடி அதை வெளிச்சந்தையில் விற்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டின் நைஜர் டெல்டா மாகாணம் மைஹா நகரில் செல்லும் கச்சா எண்ணெய் குழாயில் இருந்து சிலர் சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் திருட முயற்சித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கச்சா எண்ணெய் குழாயில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்தில் கச்சா எண்ணெய் குழாயில் பயங்கரமாக தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.