ஆப்பிரிக்க நாடான நைஜரில் கடந்த ஜூலை மாதம் அதிபர் முகது பாசும் சிறைபிடிக்கப்பட்டார். அது முதல் அங்கு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அண்டை நாடான மாலி எல்லை அருகே பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்குள்ள தபடோல் பகுதியில் ராணுவத்தினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் 29 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் இருவர் படுகாயம் அடைந்ததாக நைஜர் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.