Tamilசெய்திகள்

நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் – காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்

மத்திய கலாசாரத் துறை அமைச்சகத்தின் கீழ், தன்னாட்சி பெற்ற அமைப்பாக நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நுாலகம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார்.

இதற்கிடையே, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், பிரதம மந்திரி அருங்காட்சியகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், அற்பத்தனம் மற்றும் பழிவாங்கும் செயல் என்பதன் பெயர் மோடி. கடந்த 59 ஆண்டுகளாக நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் சர்வதேச அறிவுசார் அடையாளமாக இருந்துள்ளது. இனி அது பிரதம மந்திரி அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும்.

இந்திய தேசிய அரசின் அரசியல் சிற்பியின் பெயர் மற்றும் பாரம்பரியத்தை அழிக்க, மறைக்க மோடி எதையும் செய்வார். பாதுகாப்பின்மை எண்ணம் காரணமாக சிறுமையைச் சுமந்து திரியும் சிறிய மனிதர் என தெரிவித்தார்.