நேபாளத்தில் விமான விபத்து – 3 பேர் பலி

நேபாளத்தில் லுகியா விமான நிலையத்தில் இன்று ஒரு குட்டி விமானம் புறப்பட்டது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து ஓடு தளத்தில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்றது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஹெலிகாப்டர்கள் மீது மோதி நொறுங்கியது.

இந்த விபத்தில் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டரின் இணை விமானி துங்கானா, உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராம்பகதூர் காட்கா ஆகியோர் அதே இடத்தில் பலியாகினர்.

படுகாயம் அடைந்த மற்றொரு உதவி சப்-இன்ஸ்பெக்டர் ருத்ரா பக்தூர் ஸ்ரேஸ்தா காத்மண்டுவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர்கள் தவிர ஹெலிகாப்டரில் அமர்ந்து இருந்த விமான கேப்டன் ஆர்.பி. ரொசாயா, கேப்டன் சேட் குரங் ஆகியோர் காயம் அடைந்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools