நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பலி
நேபாள நாட்டில் உள்ள கர்னாலி மாகாணத்தில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் முகு மாவட்டத்தின் சியார்கு கணவாயில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சென்ற மீட்புக்குழுவினர் காயம் அடைந்த 9 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.