X

நேபாளத்தில் நிலச்சரிவு – 17 பேர் பலி

நேபாளம் நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கன மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. சுதுர்பாசிம் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக அக்செம் மாவட்ட அதிகாரி திபேஷ் ரிஜாலின் தெரிவித்துள்ளார்.

உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அவர் கூறியுள்ளார். இந்த மாகாணத்தில் உள்ள ஏழு மாவட்டங்களை இணைக்கும் பீம்டுட்டா நெடுஞ்சாலையும் இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்கே 450 கி.மீ. தொலைவில் உள்ள அக்செம் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி காயமடைந்த நிலையில் 11 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சுர்கெட் மாவட்டத்திற்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். நிலச்சரிவில் சிக்கி 3 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவு நடைபெற்ற பகுதியில் நேபாள காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்