நேட்டோ உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபரிடம் உதவி கேட்ட உக்ரைன் அதிபர்

 

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இன்று நேட்டோ உச்சி மாநாடு நடைபெற்றது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பிற நாட்டு முக்கிய தலைவர்களும் கலந்துக் கொண்டனர். இதில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி மூலம் பங்கேற்றார்.

அப்போது பேசிய ஜெலன்ஸ்கி, வரம்புகள் அற்ற ராணுவ உதவிக்கு அமெரிக்காவிடம் கோரினார். மேலும், விமான எதிர்ப்பு மற்றும் கடற்படைக்கு எதிரான ஆயுதங்கள் தேவை என்றும், ஆயுதங்கள் இல்லாமல் இதுபோன்ற போரில் உயிர்வாழ முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், உக்ரைனின் பாதுகாப்பிற்காக நாம் ஒரு முக்கியமான நேரத்தில் கூடியுள்ளோம். கிரெம்ளினின் தூண்டுதலற்ற ஆக்கிரமிப்பைக் கண்டிப்பதிலும் உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான எங்கள் ஆதரவிலும் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்.

இந்த பயங்கர போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ரஷியா மீதான தடைகளைத் தொடர்ந்து விதிப்பதில் கூட்டணி உறுதியாக உள்ளது” என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools