நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் – அமைச்சர் சக்கரபாணி

அரசு கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு
வரப்பட்டது. அப்போது பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோடை மழை காரணமாக கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் நிலையில் இருப்பதாக
சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ. வேல்முருகன், நெல் மூட்டைகளை சேமித்து வைக்க தானியக் கிடங்குகள் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து
இந்த தீர்மானம் குறித்து விளக்கமளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சுமார் 2 லட்சத்து 73 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான நெல் மூட்டைகள் 51 சேமிப்புக் கிடங்குகளிலும், 166
திறந்த வெளி சேமிப்புக் கிடங்குகளிலும் பாதுகாக்கப்பட்டு வருவதாக விளக்கமளித்தார்.

அதே சமயம் நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools