நெல்லை ரெயில் சேவை மீண்டும் துவங்கியது
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது.
தேவைக்கேற்ப அரசு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பாதுகாப்பு கருதி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது. மழை ஓய்ந்த பிறகு மீட்பு பணிகளும், நிவாரண உதவிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நெல்லை ரெயில் நிலையத்தில் சூழ்ந்து இருந்த வெள்ள நீர் வடிந்த நிலையில் ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. நெல்லை – செங்கோட்டை இடையே பயணிகள் ரெயில் சேவை, செங்கோட்டை – தாம்பரம் இடையே இயங்கும் பாலருவி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில் சேவைகள் வழக்கம் போல செயல்படும் என தகவல் வெளியாகியுள்ளது.