Tamilசெய்திகள்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 31 ஆம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் – அரசு அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி வெள்ளத்தால் சேதமடைந்த விவரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.

இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகைக்கான டோக்கன் விநியோகம் நேற்று தொடங்கியது.

இந்நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் டிசம்பர் 31-ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும். நிவாரண நிதி வழங்கும் பணிகளுக்காக அன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.