நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவு பாதிப்படைந்த தாலுகா பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரமும், மற்ற பகுதிகளுக்கு ரூ.1000 நிவாரண தொகையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி டோக்கன்கள் வழங்கப்பட்டு நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் 92 சதவீத நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும், டோக்கன் பெற்றவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் கட்டாயம் நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.