தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர் படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன் கடந்த ஆண்டு ஒரு போட்டோஷூட் மூலம் வைரல் ஆனார். புத்தாண்டு பற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘2019ம் ஆண்டு, ரொம்ப சிறப்பாக இருந்தது. 2020ம் ஆண்டும், சிறப்பாகவே இருக்கும் என கருதுகிறேன்.
கடந்த ஆண்டு, சேலையில் நடத்திய போட்டோ ஷூட்டுக்கு, பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை. அது, எனக்கும், சேலைக்கும் உள்ள பிணைப்பாகவும், என் அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம். சமூகவலைதளங்களில் வரும், ‘நெகடிவ் கமென்ட்’களை பற்றி, நான் கவலைப்படுவது இல்லை,”என்றார்.