X

நீலகிரி மாவட்டத்தில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

நீலகிரி மாவட்டம், கோயம்புத்தூர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை, பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.