Tamilவிளையாட்டு

நீரஜ் சோப்ரா பெயரில் விளையாட்டு மைதானம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ஒலிம்பிக் தடகளப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் முறையாக தங்கம் வென்று கொடுத்ததால் நீரஜ் சோப்ராவை நாடே கொண்டாடுகிறது.

அவரை கவுரவிக்கும் வகையில் புனேயில் உள்ள ராணுவ விளையாட்டு மையத்தில் உள்ள ஸ்டேடியத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெயர் மாற்றப்பட்ட ஸ்டேடியத்தை. பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இன்று திறந்து வைத்தார். விழாவில் நீரஜ் சோப்ராவும் கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ‘விளையாட்டுகளை ஊக்குவிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். நமது பிரதமர் விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க பணியாற்றி வருகிறார். விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இந்த நடைமுறைகளில் மாநில அரசுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன’ என்றார்.