நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும் ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க மறுக்கும் மேற்குவங்காள போலீஸ்

மேற்கு வங்காள மாநிலம் 24 பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளியில் பெண்களிடம் சொத்துகளை மிரட்டி பறித்ததாகவும், நிலத்தை அபகரித்ததாகவும், பெண்களை கூட்டு பலாத்காரம் செய்ததாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

குற்றச்சாட்டு எழுந்ததும் ஷேக் ஷாஜகான் தலைமறைவானார். சுமார் 55 நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்தபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாகத்தான் அவரை கைது செய்துள்ளோம் என மேற்கு வங்காள போலீசார் தெரிவித்தனர்.

ஷேக் ஷாஜகான் தொடர்பான வழக்க மேற்கு வங்காள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கு வங்காள உயர்நீதிமன்றம் “மாநில போலீஸ் முற்றிலும் ஒருதலை பட்சமாக செயல்படுகிறது. நியாயம், நேர்மை மற்றும் முற்றிலுமான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு சிபிஐ-யிடம் வழக்கை ஒப்படைப்பதை விட சிறந்தது ஏதும் இருக்க முடியாது. வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் மேற்கு வங்காள போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்று வழக்கை சிபிஐக்கு மாற்றி, ஷேக் ஷாஜகானை தங்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தினர். ஆனால் மேற்கு வங்காள போலீசார், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். ஆகையால் அவரை ஒப்படைக்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளது. இதனால் சிபிஐ போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்காள அரசு சார்பில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் அவசர மனுவாக விசாரிக்க மறுத்துவிட்டது. மேற்கு வங்காள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி-யிடம் சட்டப்படி பதிவாளரிடம் மனுவை குறிப்பிடும்படி நீதிமன்றம் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools