நீதிபதிகள் இட மாற்றம்! – உச்ச நீதிமன்றம் விளக்கம்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில்ரமானியை மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு (கொலிஜியம்) பரிந்துரை செய்தது. அதை அவர் ஏற்க மறுப்பதால், இந்த விவகாரம் பரபரப்பை உருவாக்கி உள்ளது.

இந்நிலையில், தஹில்ரமானியின் பெயரைக் குறிப்பிடாமல், நீதிபதிகள் இடமாற்றம் குறித்து சுப்ரீம் கோர்ட் நேற்று விளக்கம் அளித்தது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட் செயலாளர் சஞ்சீவ் எஸ்.கல்கோங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பல்வேறு ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகள் இடமாற்றம் தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது. தெளிவான, ஏற்கத்தக்க காரணங்கள் அடிப்படையில்தான், ஒவ்வொரு இடமாற்றமும் பரிந்துரை செய்யப்படுகிறது.

நீதித்துறையின் நலன் கருதி, இடமாற்றத்துக்கான காரணங்கள் வெளியிடப்படுவது இல்லை. ஆனால், தேவை ஏற்பட்டால், காரணங்களை வெளியில் சொல்ல சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் தயங்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools