நீட் தேர்வை தமிழில் எழுத 19,867 பேர் விண்ணப்பம்!

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 12-ந்தேதி நடைபெறுகிறது.

இதற்கு கடந்த மாதம் 13-ந்தேதி ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியது. கடந்த 10-ந் தேதியுடன் முடிவடைந்தது.

நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 890 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். இது கடந்த ஆண்டைவிட சுமார் 10 ஆயிரம் பேர் குறைவு.

அவர்களில் தமிழில் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து இருப்பவர்கள் மட்டும் 19 ஆயிரத்து 867 பேர் ஆகும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools