நீட் தேர்வு விலக்கு – தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். அதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களுடைய கருத்துக்களுக்கு பிறகு தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் அப்பாவு நீட் விலக்கு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றினார்.
இதைத்தொடர்ந்து நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கக்கோரிய தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது. நீட் தேர்வு ஒழிப்புக்கான அனைத்து நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கும் என்று முதலமைச்ச்ர மு.க.ஸ்டாலின் கூறினார்.