நீட் தேர்வு தேவையா என பரிசீலிக்க வேண்டும் – இயக்குனர் சீனு ராமசாமி

கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனுராமசாமி. இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான ‘மாமனிதன்’ திரைப்படம் இன்று வரை பல விருதுகளை குவித்து வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் சீனுராமசாமி நீட் தேர்வு தேவையா என பரிசீலிக்க வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் “சகோதரர் அண்ணாமலைக்கு வணக்கம். அரசின் திட்டங்கள் எல்லாமே வெற்றி பெறுவதில்லை, சில திரும்ப பெறப்பட்டுள்ளன.

நடைமுறையில் நீட் தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஆகவே பொதுக்கருத்துக்கணிப்பு எடுத்து நீட் தேர்வு தேவையா என பரிசீலிக்க கலைஞனாக வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema