Tamilசெய்திகள்

நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* மத்திய அரசின் நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை. அதனால்தான் தனியார் மூலம் ஆன்லைனில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது.

* நீட் தேர்வுக்கு 21 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 5800 பேர் மட்டுமே இலவச பயிற்சி எடுக்கின்றனர்.

* கல்வி டிவி மூலம் பயின்ற மாணவர்களின் கல்வித்தரம் பற்றி ஆராய திறனாய்வு தேர்வு பணி நடக்கிறது.

* 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.