நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் சேருவதற்கு அடுத்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. www.ntaneet.nic.in, www.nta.ac.in என்ற இணையதளங்களில் வரும் 31-ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணங்களுடன் ஜிஎஸ்டி சேவைக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ.1500, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ரூ.1400, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு ரூ.800 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணத்தை செலுத்த ஜனவரி 1ம் தேதி வரை தேசிய தேர்வு முகமை அவகாசம் அளித்துள்ளது. ஜூன் 4ம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இருந்து நாடு முழுவதிலும் உள்ள ஜிம்பர், எய்ம்ஸ் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளுக்கு தனித்தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news