நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் பா.ஜ.க தமிழக மக்களுக்கு துரோகம் செய்கிறது – கனிமொழி எம்.பி பேட்டி
தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுற்றுப்புற சூழ்நிலை மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் பண்ணை குட்டைகளை சீர்செய்தல், கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுதப்பட உள்ள காலநிலை சரிபார்ப்பு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. மட்டுமின்றி பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், பொதுமக்களும் நீட் தேர்வை எதிர்க்கின்றனர். நீட் தேர்வு சமூக நீதிக்கொள்கைக்கு எதிரானது. இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் அதனை எதிர்க்கிறோம்.
தமிழகத்தில் நீட் தேர்வு தேவையில்லை என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். நீட் தேர்வை பா.ஜனதா கட்சி ஆதரிப்பது என்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம்.
இவ்வாறு அவர் கூறினார்.