X

நீட் தேர்வால் மாணவி தற்கொலை – பதற வைகும் கடிதம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்காத விரக்தியில் 18 வயது மாணவி யதி அகர்வால் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார்.

ஜெய்ப்பூரில் உள்ள வித்யாதர் நகரில் தனது பெற்றோருடன் வசித்து வந்த இவர், கடந்த வியாழக்கிழமை தனது நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடினார். நள்ளிரவில் மகிழ்ச்சியாக பிறந்தநாள் கொண்டாடிய மாணவி அடுத்த சில மணிநேரங்களிலேயே தற்கொலை செய்து இறந்துள்ளார்.

மாணவியின் தற்கொலை கடிதத்தில், “தனது பெற்றோரின் எதிர்பார்ப்புகளை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. அதற்காக நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” என்று மாணவி உருக்கமாக எழுதியுள்ளார்.

இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் யதி அகர்வால் போதிய மதிப்பெண்கள் எடுக்காததால் அடுத்த வருடம் நடைபெறும் நீட் தேர்வுக்கு தயாராவதற்காக ஒரு பயிற்சி மையத்தில் அவர் சேர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.