X

“நீங்கள் உங்களையே நம்பினால் போதும்” – தினேஷ் கார்த்திக் ட்வீட்

இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தனது மோசமான ஆட்டத்தின் காரணமாக 2019 ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதனால் அவர் சமீபத்தில் போட்டி வர்ணணையாளராகவும் செயல்பட்டு வந்தார்.

இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்தி தனது சிறப்பான  ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது விளையாட்டுக்கு பல மூத்த வீரர்களும் பாராட்டு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டி20 இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

இதையடுத்து தான் இந்திய அணி உடையுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்ட தினேஷ் கார்த்திக், ‘உங்கள் ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் நன்றி. நீங்கள் உங்களையே நம்பினால் போதும். அனைத்தும் உங்களை தேடி வரும்’ என தெரிவித்துள்ளார். அவரது பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 287 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இவரது ஸ்டிரைக் ரேட் 191.33-ஆக உள்ளது.