X

நிவர் புயல் 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது

இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

சென்னைக்கு தென்கிழக்கே 450 கி.மீ., புதுச்சேரிக்கு அருகே 410 கி.மீ. தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது.

நிவர் புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மேலும் வலுப்பெறும். தீவிர புயலான நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்க உள்ளது.

நாளை மாலை அதிகபட்சமாக 120 கி.மீ. வேகத்தில் மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே புயல் கரையை கடக்கலாம்.

வங்கக்கடலில் உருவான நிவர் புயலின் வேகம் 4 கி.மீ. வேகத்தில் இருந்து 5 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.