X

“நிலைகெட்ட மனிதர்கள்” சமூக (கல்வி ) பிரச்சனையை பேசும் Pilot Film

“நிலைகெட்ட மனிதர்கள்” Pilot Film அறிமுக இயக்குனர் சரண் மணி இயக்கியுள்ளார். இயன் கிறிஸ்டியன், மதுக்கூர் சத்யா, இப்ராகிம்,  முத்து.வி,  நா.ராமலிங்கம், எஸ்.கே.மீசை இராஜேந்திரன், ம.மோகன்ராஜ்,  சதீஷ்குமார்.ச, மாலிக்கான் ஆகியோர் நடித்துள்ளனர்.  ஸ்ரீராமன் ரா.கு பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவிராகவ் இசை அமைத்துள்ளார்.

Pilot Film படம் பற்றி சரண் மணி கூறியதாவது ;
இந்த படம் “கல்வி” பிரச்சனையை மையமாக கொண்டது, காடு அருகில் குடிசையில் வசிக்கும் ஆறுமுகம் தன் மகனை படிக்க வைக்க முயற்சிக்கும்  போது ஏற்படும் பிரச்சனைகளை  எப்படி எதிர்கொள்கிறார்  என்பதை உரக்க சொல்லும் படம் “நிலைகெட்ட மனிதர்கள்” என்றார்.

இந்த Pilot Film  2021 மே 23-ம் தேதி அன்று “MOVIEWUD” OTT Platform ல் வெளியாகிறது.