நிலவில் நுண் வின் கற்களால் விழுவதால் ரோவருக்கு ஆபத்து ஏற்படும் என்று இஸ்ரோ அறிவிப்பு

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சார்பில் சந்திராயன்-3 விண்கலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. ஆகஸ்டு 23-ந்தேதி அதன் ரோவர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.

நிலவில் தரையிறங்கிய ரோவர் தொடர்ச்சியான சோதனை நடத்திய பிறகு அது தற்போது நிலவில் தூக்க நிலையில் உள்ளது. இந்த நிலையில் நிலவில் ரோவர் தூக்க நிலையில் இருப்பதால் அதற்கு புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. சந்திரனுக்கு வெளியில் இருந்து ரோவர் இந்த அச்சுறுத்தலை எதிர் கொள்கிறது.

நிலவின் மேற்பரப்பில் அடிக்கடி நுண் விண் கற்கள் விழும். நிலவில் நுண் விண் கற்கள் விழும் போது குண்டு வெடித்தால் ஏற்படுவது போன்ற பாதிப்பு ஏற்படும். தற்போது நிலவில் நுண் விண் கற்கள் விழுகிறது. சந்திராயன்3 ரோவர் நிலவில் தூங்கும் நிலையில் அந்த பகுதியில் நுண் விண்கல் விழுந்தால் அது ரோவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

ரோவர் மீது நுண் விண்கல் விழுந்தால் அது வெடித்து சிதறும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “நிலவின் மேற்பரப்பில் தொடர்ந்து விழும் நுண் விண் கற்களால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டும் பாதிக்கப்படலாம். அப்பலோ விண்கலம் கடந்த காலங்களில் இதே போன்ற பிரச்சினையை சந்தித்தது. இதனால் ரோவர் சில சேதங்களை சந்திக்கலாம்” என்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news