X

நிலவில் சந்திராயன் 3 தரையிறங்குவதை நேரலையில் பார்க்க பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் சாதனத்தை இன்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது லேண்டர் நிலவில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதன் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை காண்பதற்காக உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.

இந்நிலையில், அரியானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நிலவில் தரையிறங்கவுள்ள சந்திரயான்-3 நிகழ்வை மாணவர்கள் நேரில் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து அரியானா மாநிலத்தின் கல்வி அமைச்சர் கன்வர் பால் கூறுகையில், ” அரியானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில், நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கும் சந்திரயான்-3ன் நிகழ்வை காண நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, அனைத்து பள்ளிகளும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்து வைக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனை நேரலையில் பார்க்கும்போது அவர்களுக்கு உத்வேகமாக இருக்கும். மேலும், தன்நம்பிக்கை பெறுகும்.” என்றார்.

Tags: tamil news