நிருபர் கேள்விக்கு கோபப்பட்ட ஓ.பன்னீர் செல்வம்
மதுரை திருப்பரங்குன்றத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ஒரு நிருபர் பாரதிய ஜனதாவில் நீங்கள் சேரபோவதாக கூறப்படுகிறதே? என்று கேட்டார்.
இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத ஓ.பன்னீர்செல்வம் நான் பாரதிய ஜனதாவில் சேரப்போவது என்பது அடிமுட்டாள் தனமான கருத்து என்று கோபத்துடன் பதில் அளித்தார். தொடர்ந்து இந்த கேள்வியை எழுப்பியபோது ஏற்கனவே பதில் சொல்லி விட்டேன். திரும்ப… திரும்ப… இதுபற்றி கேட்கிறீர்களே? யார் உங்களை தூண்டி விட்டு இப்படி கேட்க சொல்கிறார்கள்? என்று கூறினார்.
அப்போது அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.