நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஜொலிக்கும் கலைஞர்!

மறைந்த தி.மு.க தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரின் வழிவந்த அண்ணாவின் திராவிட அரசியலை 1969 இல் அவரது மறைவுக்குப் பின் தமிழகத்தில் தீவிரமாக முன்னெடுத்துச் சென்ற கலைஞர் கருணாநிதி பழமைவாதத்தை வேரறுக்கும் பல மகத்தான திட்டங்களை கொண்டுவந்தவர் ஆவார்.

கை ரிக்ஷா ஒழிப்புத்திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டங்களை கொண்டுவந்தது, எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை நிறுவியது, இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்தினருக்கும் சம உரிமை கிடைக்க வழிவகை செய்தது, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைத்தது, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அளித்தது, விதவைகளுக்கு மறுமண உதவித் திட்டங்களை அளித்தது, கலப்பு திருமணங்களை ஊக்குவிக்க நிதியுதவி அளித்தது என கலைஞர் கொண்டுவந்த திட்டங்களின் பட்டியல் நீளும்.

குமரிக்கடலில் திருவள்ளுவர் சிலையை நிறுவி உலக செம்மொழி மாநாட்டை நடத்திக்காட்டினார். கலைஞரின் சாதனைகளுக்காக இன்றளவும் அவர் நினைவுகூறப்டும் நிலையில் அவரின் 101 வது பிறந்தநாளை திமுக தொண்டர்களும் அவரது அபிமானிகளும் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் நியூ யார்க் தமிழ் சங்கத் தலைவருமான கதிர்வேல் குமாரராஜா தனது குடும்பத்துடன் சேர்ந்து கலைஞருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தனது காசை செலவுசெய்து, நியூ ர்க் டைம்ஸ் சதுக்கத்தில் முழு அளவிலான விளம்பரப் பலகையில் கலைஞரின் புகைப்படத்தை இடம்பெறச் செய்துள்ளார். அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கதிர்வேல் ராஜாவின் குடும்பத்தினர் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. பிரசித்தி பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் வகையில் கலைஞரின் புகைப்படம் பிரதிபலிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools