வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் முதலாவது டி20 போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி மவுண்ட்மாங்கானுவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
இதனையடுத்து போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் வங்காளதேசம் முன்னிலையில் இருக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வருகிற 31-ந் தேதி நடைபெறுகிறது.
இதில் வங்காளதேசம் வெற்றி பெற்றால் முதல் முறையாக நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி20 தொடரை கைப்பற்றி வரலாறு படைக்க முடியும்.