நியூசிலாந்து போல் சென்னையை மாற்ற முடியும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை

சென்னை அயனாவரத்தில் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் அவர் கூறியதாவது:-

கொரோனா இல்லாத திரு.வி.க. நகர் மண்டலத்தை அரசு அதிகாரிகள் உருவாக்குவார்கள் என நம்புகிறேன். கொரோனா இல்லாத நாடாக நியூசிலாந்து உருவானது போல் சென்னையையும் மாற்ற முடியும். கொரோனா பரவலை தடுக்க தெருவாரியாக 100 சதவீத விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தனிமனித இடைவெளி என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news